ஐபிஎல் 2020 தொடரின் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்ற பின்னர் கீரோன் பொல்லார்டு சிஎஸ்கே அணியில் விளையாடும் சக வீரர் பிராவோவை கலாய்த்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த 2020 ஐபிஎல் இறுதிப்போட்டில் மும்பை- டெல்லி அணிகள் மோதின.
இதில், மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
மும்பை அணியை சிறப்பாக வழிநடத்திய ரோகித் சர்மாவை இந்திய டி-20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து மும்பை வீரர் கீரோன் பொல்லார்டு சிஎஸ்கே அணியில் விளையாடும் பிராவோவை கலாய்த்துள்ளார்.
ஐந்து கோப்பைகளை கைப்பற்றிவிட்டோம், எனவே நாங்கள் எட்டமுடியாத இடத்தில் இருக்கிறோம் என நான் நினைக்கிறேன்.
எங்களுக்கு பின்னால் உள்ள அணி (சிஎஸ்கே) 3 கோப்பைகளை வென்றுள்ளது. பிராவோ தற்போது உனக்கு முன் நான் இருக்கிறேன் என கலாய்த்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் வீரர்களான பொல்லார்டு பிராவோ இருவரும் ஐபிஎல் தொடரில் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வது சகஜமானது தான்.






