தென்மராட்சி நுணாவில் பகுதியில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
நுணாவில் வைரவர் கோவிலடியைச் சேர்ந்த யோ.கிசோபன் என்ற ஐந்து மாதக் குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.
குழந்தையை ஏணையில் போட்டு ஆட்டும் போது தலைப்பகுதி வீட்டுச்சுவரில் இடிபட்டுள்ளது. இது கடந்த 19 திகதி நடந்துள்ளது.
இதன் பின் பெற்றோர்கள் குழந்தையை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அடுத்த நாள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டது.
வீடு வந்து 2 நாளுக்கு பின்பு குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது. பெற்றோர்கள் தனியார் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை குழந்தை உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






