சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மிளகு சீரக இடியப்பம் செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
இருமலை குணமாக்கும் மிளகு சீரக இடியப்பம் செய்ய
தேவையான பொருட்கள்……………
இடியப்பம் – 6
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
*இடியப்பத்தை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
*வாணலியில் நெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
*பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள்,பெருங்காயத்தூள், சிறிது உப்பு போட்டு இடியப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.
சூப்பரான மிளகு சீரக இடியப்பம் ரெடி






