பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி ஹோட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவரது மரணம் எப்படி நடந்தது இதற்கு பின் யாராவது உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களது ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது சித்ராவிற்கு அவரது தாய் மற்றும் கணவர் என இரண்டு தரப்பிலும் வந்த மன அழுத்தம் காரணம் என்றும் ஹேமந்த் குடித்துவிட்டு சித்ராவிடம் தகராறு செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரது சொந்தங்களே மரணத்திற்கு காரணமா என்று ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.






