இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது சமூக மயமாகியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சமூகத்திற்குள் உப பரவல்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் எந்தவொரு குறைவும் இதுவரையில் ஏற்படவில்லை.
நாட்டின் பல இடங்களில் பரவல்கள் உருவாகியுள்ளன. தற்போதைய உண்மை நிலை என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
யார் மீதும் குற்றம் சுமத்த முடியாத நிலை இது. அதிக பரவலின் துரதிஷ்ட நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
நாட்டின் உண்மையான நிலைமையை மக்கள் அறிந்திருக்க வேண்டும். அது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






