கொங்க்ரீட் புதைகுழிகளில் கொவிட் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் இதுவரையில் தகனம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொங்க்ரீட் புதைகுழிகளை அமைத்து அதில் கொவிட் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கும் செய்யும் யோசனை ஒன்றை முன்மொழிவதாக சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொங்க்ரீட் புதைகுழிகளை அமைப்பதற்காக பொருத்தமான உலர் நிலமொன்றை தெரிவு செய்வது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கட்டாயமாக சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.






