புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச விவசாயிகளிடையே பிரதமா் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றவுள்ளார்.
இதுகுறித்து மத்திய பிரதேச மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், “மத்திய பிரதேச மாநில அரசு சாா்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ரெய்சன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பயிா் சேதத்தால் பாதிக்கப்பட்ட 35.50 இலட்சம் விவசாயிகளுக்கு 1,600 கோடி ரூபாய் நிவாரணத் தொகை அவா்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
அதைத் தொடா்ந்து பிற்பகல் 2 மணியளவில் பிரதமா் மோடி காணொலி முறையில் உரையாற்றுகிறாா். அப்போது புதிய வேளாண் சட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து அவா் விவரிக்கவுள்ளாா்” எனத் தெரிவித்துள்ளார்.






