பிரித்தானியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பல நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சொல்லப் போனால் முன் எச்சரிக்கை விடுக்கப்படாத பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. பல இடங்களில் பொலிசார் திடீரென வீடுகளுக்குச் சென்று வீட்டை காலி செய்யுங்கள். இன்னும் சில மணி நேரத்தில் வெள்ளம் வரும் என்று கூறி மக்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்.
அவர்கள் கூறியது போலவே வெள்ளம் சில மணி நேரங்களில் அவ்விடங்களில் வந்து வீட்டுக்குள் புகுந்து விட்டது.








