என்னை எதிர்த்தவர்கள் மீது நான் எந்ததொரு கோபமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்
நேற்று (திங்கட்கிழமை) காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமை கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய சோனியா நான் இந்த நடவடிக்கையால் காயமுற்றுள்ளேன்.
ஆனால் எதிர்த்தவர்கள் என் நண்பர்கள். எது நடந்ததோ அது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணி புரிவோம் என கூறியுள்ளார்.






