சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40ஆயிரத்தைக் கடந்ததுள்ளது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் வைரஸ் தொற்றினால் 40ஆயிரத்து 60பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து , சுவிஸ்லாந்தில் மொத்தமாக இதுவரை 2,001பேர் உயிரிழந்து காணப்படுகின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 157பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.
மூவாயிரத்து 659பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.16பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 34ஆயிரத்து 400பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.






