இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஆரோக்கியமான கொள்ளு இட்லி பொடி
தேவையான பொருட்கள் :
கொள்ளு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ற அளவு
செய்முறை:
*வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.
*மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
*ஆறிய பின்னர் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
*சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.
*இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.






