அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டொக் உட்பட பல்வேறு செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இந்தியா அவற்றுக்கு தடைவிதித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டொக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பின் தீவிர நடவடிக்கையை நியாயப்படுத்த எந்தவொரு ஆதாரமும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் நிறுவனத்தின் உரிமைகளை பறிப்பதாக டிக்-டொக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.






