கனடாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 448பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 417பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 94பேர் உயிரிழந்து காணப்படுகின்றனர்.
நான்காயிரத்து 868பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு ஒரு இலட்சத்து பனிரெண்டாராயிரத்து 455பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.






