திருக்கோவில் பொலிஸ் நிலையத் தாக்குதலில் உயிரிழந்த பாண்டிருப்பைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அழகரெத்தினம் நவீனனின் வீட்டுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று விஜயம் செய்துள்ளார்.
இதன்போது நவீனனின் தாயாரைச் சந்தித்து பொலிஸ்மா அதிபர் ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவத்தையிட்டு கவலையடைவதாகவும், பொலிஸ் திணைக்களத்தின் உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்று கூறி அவருக்கு அடுத்தகட்ட பதவி உயர்வுக்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபர், நவீனனின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.






