யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் எட்டுப்பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேருக்கு நேற்று Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஐவருக்கும் 5 தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குமெனெ மொத்தம் எண்மருக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
இது தவிர, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த ஐவருக்கும் கிளிநொச்சி covid-19 சிகிச்சை நிலையம் னிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் உறுதிப்படுத்தப்பட்டது.






