தளபதி விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி.
இப்படம் வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள் ஆகியுள்ளதை ரசிகர்கள் #21YearsOfBBKushi என்ற ஹாஷ் டேக்கில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
இந்நிலையில் குஷி படத்தின் பல அன்ஸீன் புகைப்படங்களை ரசிகர்கள் அந்த ஹாஷ் டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் குஷி படத்தின் முதல் காட்சியை ஆக்ஷன் சொல்லி கமல் தொடங்கி வைத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த விழாவில் நடிகர் அஜித்தும் கலந்து கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.







