15வயதிலேயே திரைப்படத்தில் கதாநாயகியாக மாறிய நடிகை தான் லட்சுமி மேனன்.இவர் பிரபு சாலமன் இயக்ககத்தில் விக்ரம் பிரபு நடித்த “கும்கி” என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்.
இப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த “சுந்தரபாண்டியன்” உள்பட பல படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார்..
இவ்வாறு இருக்கையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்களை பதிவேற்றியதும் வைரலாகி விடும் என்று தான் கூற வேண்டும்.
அந்தவகையில் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
View this post on Instagram






