அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.
வெளிவந்த நிமிடத்தில் இருந்து தொடர்ந்து பல சாதனைகளை Youtube-ல் படைத்தது வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 17 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இதுவரை வெளிவந்த தென்னிந்திய டிரைலர்களில் 24 மணி நேரத்தில் அதிக லைக்ஸ்களை பெற்ற பட்டியலில் 1.32M லைக்ஸ்களை வாங்கி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ஏனென்றால், விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் டிரைலர் 24 மணி 1.66M பெற்று, முதலிடத்தில் உள்ளது.
இதன்முலம், பிகில் பட டிரைலர் வாங்கிய லைக்ஸ் சாதனையை, வலிமை டிரைலர் முறியடிக்க தவறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






