விஜய் டிவியில் பல விதமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதில் பல சின்னத்திரை பிரபலங்களே தான் போட்டியாளர்களாக கலந்துகொள்கின்றனர்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் டாடி ஷோவில் மதுரை முத்து, ராமர் என பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகர் வெங்கட் அவரது மகள் உடன் பங்கேற்று வந்தார்.
ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து திடீரென வெளியேறிவிட்டதாக தகவல் வந்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவரால் இந்த ஷோவில் தொடர்ந்து பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.






