பிக்பாஸ் அல்டிமேட் சீசன் ஆனது இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் டாஸ்க்கை சுவாரசியமாக விளையாடி வருகின்றனர்.
இந்த வாரத்தில் தாடி பாலாஜி வெளியேறிய நிலையில், நடிகர் சிம்பு போட்டியாளர்களை சரியாக விளையாட சொல்லி கண்டித்தார்.
இந்த நிலையில் இன்றைக்கான ப்ரோமோ காட்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சின்ன வயசு அனுபவத்தை ஒரு டாஸ்க்காக கேட்கிறார்.
பின்னர், அபிராமி பாலாஜியுடன் இருவரையும் பேர் செய்து டாஸ்கை, கேட்க அபிராமி சொதப்பியதால் கடுப்பான பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் இவக்கூட எதுக்கு என்ன ஃபேர் பண்ணீங்க.. என பேசுகிறார். இதனால் மனமுடைந்து அபிராமி அழுதுள்ளார்.






