அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் டான். இப்படம் கடந்த மே 13ம் தேதி மாஸாக வெளியாகி இருந்தது.
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அவர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
18 நாட்களை தாண்டியும் படம் எல்லா இடங்களிலும் பல திரையரங்குகளில் ஓடுகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் திருச்சியில் படத்திற்கு நல்ல வரவேற்பு என கூறப்படுகிறது.
அஜித்தின் வலிமை மற்றும் பீஸ்ட் பட வசூலையே சிவகார்த்திகேயனின் டான் முறியடித்துள்ளதாம். 18 நாட்களில் இப்படம் ரூ. 2.64 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
இது வலிமை மற்றும் பீஸ்ட் பட வசூலை விட அதிகம் என்கின்றனர்.






