முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘இனிய இரு மலர்கள்’. ஹிந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட இத்தொடருக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, மிகவும் அளப்பெரியது.
அதே போல் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானாலும் தமிழ் சீரியல் போலவே சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நின்றுவிட்டது. இத்தொடரில் கதாநாயகனின் பாட்டியாக நடித்திருந்தவர் நடிகை ஜரீனா ரோஷன்.
54 வயதாகும் நடிகை ஜரீனா கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால்மிகவும் சிரமப்பட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர். இதனால் சிகிக்சை பெற்று வந்த நடிகை ஜரீனா தீடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவரை மறைவு சின்னத்திரை உலகிற்கு மிகவும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






