நடிகை சமந்தா தான் தற்போதைய தேதியில் மோஸ்ட் வாண்டாட் ஹீரோயின். விவாகரத்து சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க அவர் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்..
நாக சைதன்யா மற்றொரு பிரபல நடிகையை டேட்டிங் செய்து வருகிறார் என செய்தி பரவிய நிலையில் அந்த கிசுகிசுவை சமந்தா தான் பரப்பிவிட்டிருப்பார் என செய்தி பரவ, அது பற்றி கோபமாக அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க சமந்தா ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டமான ஒரு செய்தி வந்திருக்கிறது.
டாப் பாலிவுட் ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளிய சமந்தா!
டாப் நடிகைகள் லிஸ்டில் முதலிடம்
இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஆக இருக்கும் நடிகைள் லிஸ்ட்டை Ormax நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் சமந்தா தான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.நயன்தாரா மட்டுமின்றி மற்ற பாலிவுட் நடிகைகளையும் சமந்தா பின்னுக்கு தள்ளிவிட்டார்.






