தளபதி 67
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 67. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு மொத்தம் ஆறு வில்லன்கள் என்றும், இதில் சஞ்சய் தத், பிரித்விராஜ் தேந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யுடன் இணையும் மாபெரும் வில்லன் நடிகர்.. லோகேஷ் கனகராஜின் சிறப்பான சம்பவம் | Popular Villan Actor Have Big Role In Thalapathy67
இதுமட்டுமின்றி விஜய்க்கு வில்லியாக சமந்தாவும், கதாநாயகியாக திரிஷாவும் கமிட்டாகியுள்ளதாக தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்துள்ள.
விஜய்யுடன் வில்லன் நடிகர்
இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய அடுத்த படத்தில் மன்சூர் அலிகானுக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.
விஜய்யுடன் இணையும் மாபெரும் வில்லன் நடிகர்.. லோகேஷ் கனகராஜின் சிறப்பான சம்பவம் | Popular Villan Actor Have Big Role In Thalapathy67
ஆனால், அதை அவரிடம் இதுவரை கூறவில்லை என்றும், விரைவில் அதற்கான வேலைகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் என்பதும், கைதி படத்தை முதன் முதலில் மன்சூல் அலிகானுக்காக தான் லோகேஷ் கனகராஜ் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






