பிக்பாஸ் 6வது சீசன்
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டது, ஆரவ், ரித்திகா, முகென், ஆரி, ராஜு என 5 சீசன்களின் வெற்றியாளர்களாவர்.
இப்போது 6வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது, இதில் சாதாரண மக்கள் கூட கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை ஒரு புரொமோ மூலம் அண்மையில் அறிவித்தார்கள்.
அதில் ராஜு நடித்திருந்தார்.
அடுத்த அப்டேட்
ப்போது நிகழ்ச்சி குறித்து என்ன அப்டேட் என்றால் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்நிகழ்ச்சியின் புரொமோ படமாக்கப்பட்டதாம். வரும் செப்டம்பர் 9ம் தேதி பிக்பாஸ் 6வது சீசன் புரொமோ வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த முறையும் கமல்ஹாசன் அவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கின்றனர்.






