கேப்டன் மில்லர்
தனுஷின் நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில் தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய நடிக்கிறார்கள்.
மேலும் தற்போது அப்படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல OTT நிறுவனம் அமேசான் பிரைம் ரூ. 38 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.
அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தையும் அமேசான் பிரைம் ரூ. 34 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






