நடிகை சித்ரா குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன் முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார், தொகுப்பாளினி, நடிகை என பன்முகத்தன்மை கொண்டவராக சித்ரா இருந்தார்.
சித்ரா பல சீரியல்களில் நடித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், சித்ரா முல்லையாகவும், குமரன் கதிராகவும் அசத்தலாக நடித்திருப்பார்கள்.
இந்த நிலையில் சித்ரா குறித்து ஏற்கனவே குமரன் உருக்கமாக பேசியிருந்த நிலையில் மீண்டும் தற்போது பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், சித்ரா தன்னுடைய நல்ல நண்பர் ஒருவரிடம் தனது தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்திருக்கலாம்.
அப்படி செய்திருந்தால் சித்ரா இப்போது நம்மோடு இருந்திப்பார் என வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் சித்ராவுடன் ஒன்றாக நடித்தது அவர் பேசியது உள்ளிட்ட தகவல்களை குமரன் கண்ணீருடன் கூறியுள்ளார்.






