முருங்கை மரம் இருந்தால் போதும் அந்த வீட்டில் நோயே வராது என பெரியவர்கள் சொல்வதுண்டு.
அதற்குக் காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள்தான். அதன் இலை, காய் , பூ , பிசின் என அனைத்தும் உடலுக்கு ஊட்டச்சத்து தருகின்றன. குறிப்பாக இது நீரிழிவு நோய்க்கு பெரிதும் உதவுகின்றது.
அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய் வராமல் இருக்கவும் முருக்கைக்காயில் தேநீர் செய்து குடித்து வரலாம்.
தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
முருங்கைக்காய் தேநீர் போடும் முறை
- முருங்கைக்காய்களை துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
- பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். முருங்கைக்காய் சுருங்கி அதன் சாறு நன்கு இறங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள்.
- பின் அந்த நீரை பருகுங்கள். இந்த நீரை குடிக்கும் முன் உங்கள் மருத்துவரையும் கலந்து ஆலோசிப்பது நல்லது.
நன்மைகள்
- முருங்கைக்காயில்இதில் விட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளதால் கண் பார்வைக்கு நல்லது.
- பொட்டாசியம் சத்து முருங்கைக்காயில் இருக்கிறது. முட்டைக்கு நிகரான புரதச்சத்தும் இதில் உள்ளது. கால்சியம், விட்டமின் சி-யும் இதில் நிறைவாக உள்ளன.
- இரும்புச் சத்து, உயிர்ச்சத்து, கனிமங்கள் இருப்பது உடலுக்கு நோய் சக்தி ஆற்றலை அதிகரிக்கிறது.
- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் முருங்கைக்காய் உதவுகிறது. இது நச்சு நீக்கியாகவும் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது.






