முந்திரியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி, மக்னீசியம், செலினியம் போன்றவை அதிகமாக உள்ளது.
இதை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் பல பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஏராளமான நன்மைகளைக் கொண்ட முந்திரி, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும்.இப்போது யாரெல்லாம் முந்திரியை சாப்பிடக்கூடாது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிடலாம்?
யாராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸிற்கு அதிகமாக முந்திரியை சாப்பிடக்கூடாது. ஒரு அவுன்ஸ் என்பது 18 முழு முந்திரி இருக்கும்.
அடிக்கடி தலைவலி அல்லத ஒற்றை தலைவலி பிரச்சினை கொண்டவர்கள் முந்திரியை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். முந்திரியில் உள்ள தைரமின் மற்றும் பீனைல்எத்திலமைன் என்னும் அமினோ அமிலங்கள், தலைவலியை உண்டாக்குவதாக கூறப்படுகிறது.
சரும பிரச்சனை இருந்தால், முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முந்திரியில் கலோரிகள் அதிகமாக உள்ளன. எனவே முந்திரியை அளவுக்கு அதிகமாக ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமனை உண்டாக்கும்.
உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், முந்திரி பருப்பை சாப்பிடாதீர்கள். ஒருவேளை சாப்பிட்டால், அது வயிற்று பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அஜீரண கோளாறு, வயிற்றுப் போக்கு, வாயு மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.






