வேம்பு சுவை கசப்பானதாக இருந்தாலும் அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்காலத்திலிருந்தே வேம்பு அதன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் காரணமாக பல்வேறு தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
அதே சமயம் உடல் எடையை குறைக்கவும் செய்கிறது. வேம்பு இலையில் புரதம், வைட்டமின் சி உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் உள்ளன. மேலும் தினமும் காலையில் வேம்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம்.
வேம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு கலோரிகளை எரித்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. வேம்பு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
வேப்ப இலையில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.






