என்னென்ன தேவை?
வேகவைத்த (வஞ்சிரம், இறால், கனவா) – 300 கிராம்,
மஞ்சள்தூள்,
நறுக்கிய இஞ்சி – சிறிது,
உப்பு,
மிளகுத்தூள்,
கொத்தமல்லி – தேவைக்கு.
அரைக்க...
பூண்டு – 4 பல்,
மிளகு,
தனியா – தலா 1/2 டீஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் – 250 கிராம்,
பச்சைமிளகாய் – 3.
தாளிக்க…
நல்லெண்ணெய்,
கறிவேப்பிலை – சிறிது,
காய்ந்தமிளகாய் – 5,
கடுகு,
வெந்தயம் – தலா 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரைக்கக் கொடுத்த பொருட்களை நன்றாக வதக்கி அரைக்கவும். கடாயில் வேகவைத்த மீன், மஞ்சள் தூள், இஞ்சி, அரைத்த மசாலா, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்






