பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துடன் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும்.
இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடை இது. அதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது.
இது சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
இதில் அதிக நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்பு, சிறிதளவு புரதம் மற்றும் சர்க்கரை, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த அமிலம், பொட்டாசியம், வைட்டமின் பி, பி1, பி3, சி ஆகியவை அதிகம் காணப்படுகின்றன.
மேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அந்தவகையில் இந்த அற்புத கிழங்கை எப்படி சாப்பிடலாம்? இதன் மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

எப்படி சாப்பிடலாம்?
- கிழங்கினை நன்றாக வேகவைத்து மிளகு, உப்புத்தூள் தடவி சாப்பிடலாம்.
- நன்றாக வெந்த பின்னர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக அரைத்து தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து புட்டு செய்தும் சாப்பிடலாம்.
நன்மைகள் என்ன?
- பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத் தந்து அழகைக் கூட்டும். தசைகளை வலிமைப்படுத்தும்.
- எலும்பைப் பற்றும் காய்ச்சல். இது ரத்த புற்றுநோயின் அறிகுறி. ரத்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு.
- பனங்கிழங்கில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
- பனங்கிழங்கு பெருங்குடலில் நச்சுத்தன்மை உள்ள பொருட்கள் சேர்வதைக் கட்டுப்படுத்தி, கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது. இதனால், பெருங்குடலில் உண்டாகிற புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
- பனங்கிழங்கில் கால்சியம், பாஸ்பரஸ் உடல் வலிமை, மூளை வளர்ச்சி, எலும்புகளை பலம் பெறச் செய்தல் ஆகியவற்றுக்குத் துணை செய்கிறது.
- பனங்கிழங்கில் சி வைட்டமின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
- பசியை கட்டுப்படுத்துகிற திறன் உண்டு என்பதாலும், கொழுப்பு சத்து இல்லாத கிழங்கு என்கிற காரணத்தாலும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, வாய், வயிறு ஆகிய உறுப்புகளில் ஏற்படுகிற புண்களையும் குணப்படுத்துகிறது.
- கோடைக்காலத்தில் வருகிற வியர்க்குரு மற்றும் தேமலை சரிசெய்ய, இக்கிழங்கினைப் பாலில் வேகவைத்து, சருமத்தில் தடவி வர உடனடியாக பலன் கிடைக்கும்.






