சாப்பிட்ட பின்னர் உடனடியாக குளிக்கக்கூடாது என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறி கேட்டிருப்போம்.
அவர்களிடம் ஏன் என்று காரணம் கேட்டால், நல்லதல்ல என்று மட்டும் சொல்வார்கள்.
அதற்கு பின் அறிவியல் காரணம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
சாப்பிட்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது?
உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது.
சாப்பிட்ட பின் குளிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்
உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.






