கனடா, ஹொங்ஹொங், சிங்கப்பூர், கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தொழில்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, பாரியளவில் நிதி மோசடி செய்த இருவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம் வயது கணவன், மனைவியே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்களால் 2 மாதங்களில் 60 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதென்றும் பொலிஸ் தலைமையத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.






