திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதான நகரில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கடையினை உடைத்து பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் திருடப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தின்போதான காட்சி கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த திருட்டின்போது, ஒரு இலட்சத்து பத்தாயிரம் அளவிலான பணம் மற்றும் மீள் நிரப்பு அட்டைகளை குறித்த நபர் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மைக் காலமாக கொட்டகலைப் பகுதியில் பல்வேறு கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுகுறித்து எவரும் இதுவரை கைதுசெய்யப்படாததால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுள்ளது.
இந்நிலையில், திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியன இணைந்து சம்பவத்துடன் தொடர்புடைய திருடர்களைப் பிடிப்பதற்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






