மாத்தறை – பஸ்கொட பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மூவருக்கிடையில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியமையே இந்த கொலைக்கு காரணம் என காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த குழு மோதலில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்கொடை முலுருதெனிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 21 வயதுடைய இளைஞரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதோடு, தாக்குதலை மேற்கொண்டவர் பலத்த காயங்களுடன் காவல் துறையினரின் பாதுகாப்பில் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






