கொழும்பு, மட்டக்குளியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்த்திசையில் வந்த லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத்தடுப்பை உடைத்துக் கொண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






