கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 907 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 111 என குறிப்பிட்டுள்ளனர்.மேலும், 192 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரை 12 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






