19ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கம் எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது, “தனிநபருக்கான அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் 19 ஆவது திருத்தம் பகிர்ந்தளித்து இருந்தது.
அதாவது, வேறொரு வழியில் நிறைவேற்று அதிகாரம் இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பின் 19 ஆவது திருத்தம் குறித்து கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் தற்போது, தனிநபருக்கு நிறைவேற்று அதிகாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாத்திரமே குறித்த 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப்பொறி” என அவர் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






