மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வயம்ப மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலமவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமை குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு, வட மத்திய, மற்றும் வட மேல் மாகாணங்களிலும், திருகோணமலை அம்பாந்தோட்டை கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.






