மன்னார் மாவட்டத்தில் Nov-8 மேலும் புதிதாக 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 2547 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் நேற்று (9) விடுத்துள்ள கோவிட் நிலவர அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தில் Nov- 8 மேலும் புதிதாக 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 154 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 7 ஆம் திகதி மன்னாரைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இவ்வருடம் 2530 கோவிட் தொற்றாளர்களும் தற்போது வரை 2547 கோவிட் தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






