வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவித்து இராணுவ வாகனம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது.
வவுனியா- பண்டாரிக்குளம் பகுதியில் இரவு (12.11) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, புகையிரத நிலைய வீதியூடாக முச்சக்கரவண்டி ஒன்று பயணித்த போது இராணுவ கப் ரக வாகனம் ஒன்றைக் குறித்த முச்சக்கரவண்டி முந்திச் செல்ல முற்பட்ட போது இராணுவ வாகனத்தின் சாரதிக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி இராணுவ வாகனத்தை முந்திச் சென்றுள்ளது.
இதனையடுத்து வவுனியா – பண்டாரிக்குளம் வீதியில் திரும்பிய முச்சக்கர வண்டியை வழிமறித்த குறித்த இராணுவ கப் ரக வாகனத்திலிருந்த இராணுவத்தினர் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.






