இரத்தினபுரி கொடகவெல பிரதேசத்தில் பாரிய கல்லொன்ற விழுந்ததில் அதில் நசுங்குண்டு இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவமொன்ற பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்குவாரியொன்றில் காணப்பட்ட கல்லொன்றே குறித்த இளைஞரின் மீது வீழ்ந்துள்ளது.
அதனை அடுத்து படுகாயமடைந்த இளைஞனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழிந்துள்ளார்.
பல்லேபத்த பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






