குருநாகல் பனாகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவர் தனது தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கி படுகொலை செய்துள்ளார் என்று, போகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பனாகமுவ கோபால கெதர பிரதேசத்தை சேர்ந்த 62 வயது நபரே மரணமடைந்தார்.
சம்பவத்தில் உயிரழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயது நபரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






