மாத்தளை தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலியத்த பொலிஸ் பிரிவில், வீடொன்றில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டி 56 ரக துப்பாக்கி, 01 மெகசின் மற்றும் 19 தோட்டாக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை பெலிஅத்த பிரதேசத்தை சேர்ந்த நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 28 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.






