கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புகளில் இருவர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்று (17) மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் ஹெரோய்னுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அய்லப்பெரும பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 12 கிராம் 68 மில்லிகிராம் ஹெரோய்னுடன் கோரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 26 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாதம்மாவத்தை, தொட்டலங்க ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புகளில் 17 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒருகொடவத்த, கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 22, 31 வயதுடைய இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்கல்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 07 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று கம்பஹா துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 07 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 30 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.






