தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் வர்த்தக நிலையத்தில் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு வேலி அமைக்கப் படாமையால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.
வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு தப்பிக்க முயன்ற போது அவ்விடத்தில் உள்ள பொது மக்கள் முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.






