12 வயதுச் சிறுமியுடன் சேட்டை விட்ட அயலவரின் காதை சிறுமியின் தந்தை அறுத்ததோடு வெட்டிக் காயப்படுத்திய சம்பவம் கிளிநொச்சி, தருமபுரத்தில் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்திய சிறுமியின் தந்தை தர்மபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம், அயலவர் ஒருவர் தனித்திருந்த 12 வயதான சிறுமியுடன் சேட்டை விட்டுள்ளார் என்றும், அதை அறிந்த தந்தை ஆத்திரத்தில் அயலவர் மீது சரமாரியாக வெட்டித் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
தாக்குதலில் அயலவரின் காது அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும் கால் போன்ற இடங்களிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்தவர் தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.






