யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரித்து 85 ரூபா எனவும், ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.
யாழ். மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரச அதிபரின் தலைமையில், மேலதிக அரச அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர் ஆகியோருடன் பாணின் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணத்தால் 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரித்து 85 ரூபா எனவும், ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.






