தற்போதைய அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பில் கோப் மற்றும் கோப்பா குழுக்களின் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளமையால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான ராஜபக்ஸ நிறுவனம், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளது என்று, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோப் மற்றும் கோப்பா குழுக்களுக்கு அரசியல்வாதிகளை நியமிப்பதற்காகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.
கோப் மற்றும் கோப் குழுக்களின் தலைவர்களாக செயற்பட்;ட பேராசிரியர்களான சரித்த ஹேரத் மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர், தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விடயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால் இதுவிடயத்தில் அதிருப்த்தியடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான ராஜபக்ஸ நிறுவனம், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளது.
அரசாங்கம் எத்தகைய நாடகத்தை நடத்துகின்றது என்பதை சிறுவர்களும் நன்கு அறிவர்.
மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது கோப் மற்றும் கோப்பா குழுக்களின் தலைவர்களாக ராஜபக்ஸ குடும்பத்திலுள்ளவர்களை நிமியத்தாலும் ஆட்சேபிப்பதற்கு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






